127 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி
127 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி
திருவண்ணாமலை 606705
Gallery >> EXAM APR 2020 DETAILS >>

FINAL YEAR EXAM INFORMATION oct 2020-2021

முக்கிய அறிவுரை
விடைகளை A4 அளவு தாளில் இரு பக்கங்களிலும் எழுத வேண்டும். கருப்பு அல்லது நீலநிற மை மட்டுமே உபயோகிக்கவும்.
20 மி.மீ. இடைவெளியை அனைத்து விளிம்புகளிலும் விட வேண்டும். அனைத்து பக்கங்களிலும் மேலே தேர்வு பதிவு எண், மாணவரின் பெயர் மற்றும் வினாத்தாள் எண் ஆகியவற்றையும், கீழே பக்க எண்ணையும் எழுதவும். அனைத்து பக்கங்களின் கீழே மாணவர்கள் தங்களது கையெழுத்தை இட வேண்டும். தேர்வு எழுதிய பின்பு முகப்பு பக்கத்தில் மொத்தமாக எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையை எழுதவும் (முகப்பு பக்கத்தையும் கணக்கில் கொண்டு) தேர்வு எழுதிய பின் முதல் தாளுடன் சேர்த்து அனைத்து பக்கங்களையும் (வரிசைப்படி), ஸ்கேனர் அல்லது ஸ்மார்ட் போன் கொண்டு jpg/jpeg வடிவில் ஸ்கேன் செய்து, வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். UPLOAD பட்டனை அழுத்துவதற்கு முன்பு அனைத்து பக்கங்களும் முழுமையாக மற்றும் தெளிவாக உள்ளதா? என்பதை உறுதி செய்யவும். முதல் தாளை மேலே வைத்து விடைத்தாள்களை (வரிசைப்படி வைத்து) பின் செய்யவும்.
அதை கவரில் வைத்து அதன் மேல் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள மண்டல பொறியியல் கல்லூரியின் முகவரி லேபிளை ஒட்டவும்.
இதற்கு எந்தவொரு அஞ்சல் வில்லையும் ஒட்ட வேண்டாம். பின்னர் அதை தபால் பெட்டியில், பரிட்சை நடைபெற்ற நாளிலேயே சேர்க்கவும்.